×

28 கட்சி தலைவர்களுக்கு அழைப்பு நவ.16ல் டெல்லியில் முஸ்லிம் லீக் மாநாடு: காதர்முகைதீன் பேட்டி

நெல்லை: நவம்பர் 16ம் தேதி டெல்லியில் முஸ்லிம் லீக் மாநாடு நடைபெறும், இதில் 28 கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று அக்கட்சி தலைவர் காதர்முகைதீன் தெரிவித்தார். நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்முகைதீன் அளித்த பேட்டி: கேரளாவில் 25 லட்சம் உறுப்பினர்களையும், தமிழ்நாட்டில் 50 லட்சம் உறுப்பினர்களையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் 16ம் தேதி டெல்லியில் கட்சியின் தேசிய பொதுக்குழு கூட்டம், மாநில நிர்வாகிகள் தேர்வு, பிரதிநிதிகள் மாநாடு நடத்த உள்ளோம். இதற்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்பட 28 கட்சிகளின் தலைவர்களை அழைக்க உள்ளோம்.

இந்தியா கூட்டணி, பாஜவை எதிர்ப்பதில் ஒற்றுமையாக உள்ளோம். பாஜ நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக, பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக, சகோதரத்துவத்தை குலைக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது. பாஜவினர் இந்து ராஷ்டிரம் அமைப்பதாகக் கூறுகின்றனர். இந்தியாவில் 25 கோடி இஸ்லாமியர்கள் உள்ளனர். நாங்கள் முஸ்லிம் ராஷ்டிரம் அமைப்பதாக பேசுவதில்லை. மக்களவை தேர்தல் டிசம்பரில் வந்தாலும், அடுத்த ஆண்டு வந்தாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

The post 28 கட்சி தலைவர்களுக்கு அழைப்பு நவ.16ல் டெல்லியில் முஸ்லிம் லீக் மாநாடு: காதர்முகைதீன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Muslim League Conference ,Delhi ,Qader Mukhaideen ,Nellai ,Muslim League ,Kadar Mukaidin ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...